Tuesday, January 13, 2026 8:37 pm
ஐரோப்பா முழுவதும் செவ்வாய்க்கிழமை உறைபனி மழை , பனிக்கட்டி ஆகியவற்றால் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.இதனால் செக் குடியரசு, ஆஸ்திரியா, ஸ்லோவாக்கியா, ஹங்கேரியில் உள்ள விமான நிலையங்கள் விமானங்களை நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
மத்திய ஐரோப்பாவின் மிகவும் பரபரப்பான விமான நிலையங்களில் ஒன்றான வியன்னா சர்வதேச விமான நிலையத்திற்குச் செல்லும், விமானங்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன. பிராகாவின் வக்லாவ் ஹேவல் விமான நிலையம் வருகையைக் கட்டுப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது, அதே நேரத்தில் ஸ்லோவாக்கியாவின் சர்வதேச விமான நிலையம் மணிக்கணக்கில் மூடப்பட்டது.

