ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்ற 2025 உலக அரச உச்சி மாநாட்டில் பங்கேற்ற ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும், ஐக்கிய அரபு இராச்சிய உப ஜனாதிபதி, பிரதமர் , துபாய் ஆட்சியாளரான ஷேக் முஹம்மது பின் ரஷீத் அல் மக்தூமுக்கும் இடையேயான சந்திப்பு நேற்று வியாழக்கிழமை (12) நடைபெற்றது.
உலக அளவில் அரசாங்கங்களுக்கிடையிலான ஒருங்கிணைப்பை வலுப்படுத்துவதன் முக்கியத்துவம் மற்றும் பொருளாதார மற்றும் அபிவிருத்திச் சவால்களுக்கு நவீன தீர்வுகளை உருவாக்க ஒன்றிணைந்து செயல்படுவது குறித்து இதன் போது விரிவாக ஆராயப்பட்டது.
துபாயின் பட்டத்து இளவரசரும், ஐக்கிய அரபு இராச்சியத்தின் பிரதிப் பிரதமரும், பாதுகாப்பு அமைச்சருமான ஷேக் ஹம்தான் பின் முஹம்மது பின் ரஷீத் அல் மக்தூம், துபாயின் முதல் பிரதி ஆட்சியாளரும், ஐக்கிய அரபு இராச்சிய பிரதி பிரதமரும் நிதி அமைச்சருமான ஷேக் மக்தூம் பின் முஹம்மது பின் ரஷீத் அல் மக்தூம் ஆகியோரும் கலந்து கொண்டனர்.