Monday, September 15, 2025 12:16 am
ஏமனின் தலைநகர் சனா மீது இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களில் கொல்லப்பட்ட 46 பேரில் உள்ளூர் ஊடக நிறுவனங்களின் 26 ஊழியர்கள் அடங்குவர் என்று ஏமனின் ஹவுதி குழு ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது.
மத்திய சனாவில் உள்ள தஹ்ரிர் சதுக்கத்தில் உள்ள செப்டம்பர் 26 , அல்-ஏமன் ஆகிய இரண்டு செய்தித்தாள்களின் அலுவலகங்களை தாக்குதல்கள் அழித்ததாக அந்தக் குழு ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்தத் தாக்குதல் “அதன் ஊடக நடவடிக்கைகளை பலவீனப்படுத்தாது” என்றும் அது மேலும் கூறியது.
அன்றைய தாக்குதல்களில் 46 பேர் கொல்லப்பட்டதாகவும் பெண்கள் ,குழந்தைகள் ஆகியோர் உட்பட 165 பேர் காயமடைந்ததாக ஹவுத்தி கட்டுப்பாட்டில் உள்ள சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர். ஹவுத்தி நடத்தும் அல்-மசிரா தொலைக்காட்சி சேதமடைந்த குடியிருப்பு கட்டிடங்களையும், மீட்புப் பணியாளர்கள் இடிபாடுகளுக்குள் தேடும் காட்சிகளையும் ஒளிபரப்பியது.
ஹவுத்திகளின் மக்கள் தொடர்பு தலைமையகம், இராணுவ முகாம்கள் , எரிபொருள் சேமிப்பு தளம் ஆகியவற்றைத் தாக்கியதாக இஸ்ரேலிய இராணுவம் கூறியது.
வடக்கு ஏமனின் பெரும்பகுதியைக் கட்டுப்படுத்தும் ஹவுத்திகள், பதிலடியாக இஸ்ரேல் மீதான தாக்குதல்களைத் தொடரவும், காஸாவில் போரை முடிவுக்குக் கொண்டுவரவும், முற்றுகையிடவும் அழுத்தம் கொடுக்கவும் உறுதியளித்துள்ளனர்.


