மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்தின் படி, சில எரிபொருட்களின் விலைகள் நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் குறைக்கப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சு அறிவித்துள்ளது.
95 ஒக்டேன் பெட்ரோல் லீற்றருக்கு 6 ரூபா குறைக்கப்பட்டது., அதன் புதிய விலை 335 ரூபா என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் 92 ஆக்டேன் பெட்ரோல் விலையில் மாற்றமில்லை.
லங்கா ஆட்டோ டீசல் விலை லிற்றருக்கு 6 ரூபா குறைக்கப்படவுள்ளதுடன், அதன் புதிய விலை 277 ரூபாஆகும். சூப்பர் டீசல் விலையில் மாற்றமின்றி தொடர்கிறது.
மண்ணெண்ணெய் விலை லிற்றருக்கு 5 ரூபா குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 180 ரூபா என அறிவிக்கப்பட்டுள்ளது.