எரிபொருள் போதியளவு கையிருப்பில் உள்ளது என்று எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
எரிபொருள் பற்றாக்குறை ஏற்படப்போவதாக வெளியான வதந்திகளை எரிசக்தி அமைச்சு நிராகரித்துள்ளது, தற்போதைய இருப்பு போதுமானது என்றும் விநியோகச் சங்கிலிகள் தடையின்றி இருக்கும் என்றும் பொதுமக்களுக்கு உறுதியளித்துள்ளது.
அடுத்த இரண்டு மாதங்களுக்கு தேசிய தேவையை பூர்த்தி செய்ய போதுமான எரிபொருள் இருப்புக்களை இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் வைத்திருப்பதாக அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிப்பப்பட்டுள்ளது.
சமூக ஊடகங்களில் பரவும் தவறான தகவல்களை நம்ப வேண்டாம் எனவும் , மத்திய கிழக்கு மோதலை உள்நாட்டு எரிபொருள் இடையூறுகளுடன் தொடர்புபடுத்த வேண்டாம் எனவும் அமைச்சு கேட்டுள்ளது.
Trending
- IVF கருத்தரிப்பு முறையில் வெற்றிகரமாக பிறந்த முதலாவது குழந்தை
- லங்கா பிரீமியர் லீக் நவம்பரில் ஆரம்பம்
- இதயத்தை விருத்தி செய்ய புதிய கல்விச் சீர்திருத்தத்தில் கவனம் செலுத்தவும் : அனுநாயக்க தேரர்கள்
- காணி வரைபடங்களை இணையத்தில் பெறும் வாய்ப்பு
- இலங்கைக்கான அமெரிக்காவின் வரி குறைப்பு மகிழ்ச்சி அளிக்கிறது : ஹர்ஷ டி சில்வா
- பதுளைக்கு புதிய சொகுசு ரயில் சேவை
- சட்டவிரோதமாக வனப்பகுதியை துப்புரவு செய்த இருவர் கைது
- ஒகஸ்ட் மாத எரிபொருள் விலையில் மாற்றமில்லை