Sunday, January 18, 2026 4:54 pm
பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதிய திட்டத்தை இரத்து செய்வதற்காக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட மசோதாவின் பல விதிகள் அரசியலமைப்பிற்கு முரணானவை என்பதை தீர்மானிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் இரண்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
முன்னாள் எம்.பி.க்கள் எம்.எம். பிரேமசிறி, நவரட்ண பண்டா, பி.எம். தீபால் குணசேகர ,சமன்சிறி ஹேரத் ஆகியோர் ஒரு மனுவை தாக்கல் செய்துள்ளனர். இரண்டாவது மனுவை முன்னாள் எம்.பி.க்கள் பியசோம உபாலி மற்றும் உபாலி அமரசிறி ஆகியோர் தாக்கல் செய்துள்ளனர்.
சட்டத்தரணி சனத் விஜேவர்தன மூலம் சமர்ப்பிக்கப்பட்ட மனுக்கள், முன்மொழியப்பட்ட மசோதாவின் சில பிரிவுகள் அரசியலமைப்பால் உத்தரவாதம் அளிக்கப்பட்ட அடிப்படை உரிமைகளை மீறுவதாகக் கூறுகின்றன.
அதன்படி, மசோதா இயற்றப்பட வேண்டுமானால், அது பாராளுமன்றத்தில் சிறப்பு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டு வாக்கெடுப்பில் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்று தீர்ப்பளிக்குமாறு மனுதாரர்கள் உச்ச நீதிமன்றத்தை கோரியுள்ளனர்.

