Thursday, February 19, 2026 7:53 pm
இங்கிலாந்தில், மன்னர் மூன்றாம் சார்லஸின் இளைய சகோதரரான ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன்-வின்ட்சர் பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டைனுடன் தொடர்பு வைத்திருந்ததாக தகவல்கள் வெளியாகியிருந்தஇங்கிலாந்தின் சிறப்பு வர்த்தக தூதராக இருந்தார். அப்போது இரகசிய அரசு ஆவணங்களை பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீனுடன் உடன் சட்டவிரோதமாகப் பகிர்ந்ததாக இவர் மீது குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது.
அமெரிக்காவால் சமீபத்தில் வெளியிட்ட ஜெஃப்ரி எப்ஸ்டீன் பைல்களில் உள்ள மின்னஞ்சல்கள் மூலம் இந்த தகவல்கள் வெளிச்சத்திற்கு வந்திருக்கின்றன. ஆண்ட்ரூ தனது 66 வது பிறந்தநாளை கொண்டாடிக்கொண்டிருந்த வேளையில் பொலிஸாரால் அவர் கைது செய்யப்பட்டு இருக்கிறார். இங்கிலாந்தின் சட்டப்படி ஒருவர் கைது செய்யப்பட்டவுடன், அவரது பெயரை பொலிஸார் அதிகாரப்பூர்வமாக வெளியிட மாட்டார்கள். குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் வரை, அவரின் தனிப்பட்ட கௌரவம் பாதிக்க கூடாது என்பதால் இவ்வாறு செய்யப்படுகிறது. எனவே 60 வயது மதிக்கத்தக்க ஒருவரை, அரசு பதவியில் முறைகேடு செய்ததாக வந்த புகாரின் பேரில் கைது செய்துள்ளோம் என்று பொலிஸாரால் தெரிவிக்கப்பட்டது. ஆனால், கைது செய்யப்பட்டது ஆண்ட்ரூதான் என்பதை இங்கிலாந்தின் ஊடகங்கள் உறுதி செய்துள்ளன.

