Thursday, May 22, 2025 8:06 am
கணினி தரவுத்தள அமைப்பில் அவசர பராமரிப்பு பணிகள் காரணமாக மே 21 முதல் மே 23 வரை ஊழியர் சேமலாப நிதி (EPF) தொடர்பான பல முக்கிய சேவைகளை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக தொழில் திணைக்களம் அறிவித்துள்ளது. இது நாடு முழுவதும் உள்ள தொழிலாளர் திணைக்கள அலுவலகங்களுக்குப் பொருந்தும்.இந்தக் காலகட்டத்தில் பின்வரும் EPF தொடர்பான சேவைகள் நடைபெறாது.
– EPF முழுப் பலன்களையும் செலுத்துதல் (K விண்ணப்பங்கள்)
– இறந்த உறுப்பினர்களுக்கான EPF சலுகைகள் (L விண்ணப்பங்கள்) செலுத்துதல்
– EPF 30% திரும்பப் பெறுதல் செலுத்துதல்
– AH பதிவுகள்
– புதிய நிறுவனங்களின் பதிவு
– பி அட்டைகளில் திருத்தம் ஆகியன நடைபெறாது.
வழக்கமான பணிகள் மீண்டும் தொடங்கியதும், 011 2201201 என்ற துரித எண் மூலம் இந்த சேவைகளுக்கு முன்கூட்டியே முன்பதிவு செய்த பயனாளர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் தொழில் திணைக்களம் கூறியுள்ளது.

