ஸ்டாவஞ்சரில் நடந்து வரும் நோர்வே பெண்கள் செஸ் போட்டியில், ஆர்மகெடோன் சுற்றில், இந்திய கிராண்ட்மாஸ்டர் வைஷாலி ரமேஷ்பாபு பெண்கள் உலக சம்பியன் ஜூ வென்ஜூனை தோற்கடித்தார்.
இந்த வெற்றி வைஷாலியின் நிலையை உயர்த்தியது மட்டுமல்லாமல், சகநாட்டவரான கோனேரு ஹம்பி எலைட் போட்டியில் தனது முன்னிலையைத் தக்க வைத்துக் கொள்ளவும் உதவியது.
வைஷாலியை எதிர்கொள்ள முடியாமல் 37 ஆவது நகர்வில் போட்டியிலிருந்து வெளியேறினார் உலக சம்பியன் ஜூ வென்ஜூன்.