துபாயில் நடைபெறும் 2025 உலக அரசாங்க உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, நேற்று செவ்வாய்க்கிழமை (11) பாகிஸ்தான் ,இங்கிலாந்து ஆகிய நாடுகளின் தலைவர்களுடன் பல உயர்மட்ட இருதரப்பு கலந்துரையாடல்களை நடத்தினார்.
பாகிஸ்தான் பிரதமர் முகமது ஷெஹ்பாஸ் ஷெரீப்பை அனுர சந்தித்தார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக உறவுகளை வலுப்படுத்துதல் மற்றும் சந்தைகளை பன்முகப்படுத்துதல் ஆகியவை பற்றி கவனம் செலுத்தினார்கள்.
முன்னாள் பிரிட்டிஷ் பிரதமர் டோனி பிளேயரையும் ஜனாதிபதி அனுர சந்தித்தார். பல்வேறு துறைகளில் ஐக்கிய இராச்சியத்தின் நிபுணத்துவம் மற்றும் சிறப்பு அறிவைப் பயன்படுத்திக் கொள்வதற்கான இலங்கையின் திறனைச் சுற்றியே இந்த விவாதங்கள் நடைபெற்றன.
இலங்கையின் சுகாதாரம், துறைமுகங்கள் மற்றும் சுற்றுலாத் துறைகளில் முதலீட்டு வாய்ப்புகள் குறித்து ஜனாதிபதி திசாநாயக்க பிளேயருக்கு விளக்கினார், மேலும் இந்த வாய்ப்புகளை ஆராய இங்கிலாந்து முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுத்தார்.