உலகின் மிகச்சிறிய பாம்பு , கடைசியாகப் பார்த்த 20 ஆண்டுகளுக்குப் பிறகு, பார்படோஸில் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அழிந்துவிட்டதாக அஞ்சப்பட்ட பார்படோஸ் நூல் பாம்பு, மார்ச் மாதம் சுற்றுச்சூழல் அமைச்சு, பாதுகாப்பு அமைப்பான Re:wild ஆகியவற்றால் நடத்தப்பட்ட சுற்றுச்சூழல் ஆய்வின் போது தீவின் மையத்தில் ஒரு பாறைக்கு அடியில் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த ஊர்வன முழுமையாக வளர்ந்ததும் 10 செ.மீ நீளம் வரை வளரும், மேலும் ஸ்பாகெட்டி இழையைப் போல மெல்லியதாகவும் இருக்கும்.