உருகுவே ,பிறேஸில் ஆகிய நாடுகளுக்கு எதிரான உலகக்கிண்ண தகுதிச் சுற்றுப் போட்டிகளில் மெஸ்ஸி பங்கேற்க மாட்டார் என்று ஆர்ஜென்ரீனா உதைபந்தாட்ட சங்கம் அறிவித்துள்ளது.
ஞாயிற்றுக்கிழமை நடந்த MLS போட்டியில் அட்லாண்டா யுனைடெட் அணிக்கு எதிரான போட்டியில் இன்டர் மியாமி அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. அந்தப் போட்டியில் விளையாடிய மெஸ்ஸிக்கு இடதுகால் பாதிக்கப்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன, இதனால் வெள்ளிக்கிழமை உருகுவேக்கு எதிரான போட்டியிலும், நான்கு நாட்களுக்குப் பிறகு பிறேஸிலுக்கு எதிரான போட்டிகளிலும் மெஸ்ஸி பங்கேற்க மாட்டார்.