உய்குர் இனத்தவர்களையும் பிற பாதிக்கப்படக்கூடிய இன அல்லது மதக் குழுக்களையும் சீனாவிற்கு கட்டாயமாக திருப்பி அனுப்புவதில் ஈடுபட்டுள்ள வெளிநாட்டு அதிகாரிகளை குறிவைத்து அமெரிக்கா புதிய விஸாகட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது.
துன்புறுத்தலை எதிர்கொள்ளும் நபர்களை நாடு கடத்துமாறு சீனா அரசாங்கங்கள் மீது ஏற்படுத்தும் அழுத்தத்தை எதிர்கொள்வதே இந்த நடவடிக்கையின் நோக்கமாகும்.
அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ கூறுகையில், இந்தக் கொள்கை உடனடியாக அமலுக்கு வரும் எனக் கூறியுள்ளார்.
இதுபோன்ற நாடுகடத்தல்களுக்குப் பொறுப்பானவர்கள் அல்லது உடந்தையாக இருந்தவர்கள் எனக் கண்டறியப்பட்ட தற்போதைய ,முன்னாள் அதிகாரிகள் என அனைவருக்கும் பொருந்தும்.
ஆரம்ப நடவடிக்கைகள் பெப்ரவரி 27 ஆம் அதிகதி 40 உய்குர் மக்களை சீனாவிற்கு கட்டாயமாக திருப்பி அனுப்பியதில் தொடர்புடைய தாய்லாந்து அரசாங்க அதிகாரிகளை குறிவைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.