Wednesday, February 5, 2025 2:45 am
கடைகளில் விற்பனை செய்யப்படும் 400 கிராம் உப்பு பக்கெட்டின் விலை 150 முதல் 160 ரூபாய் வரை அதிகரித்துள்ளதாகக் கடை உரிமையாளர்களும் நுகர்வோரும் தெரிவிக்கின்றனர்.ஒரு கிலோ உப்பு பக்கெட்டுகளுக்கு பற்றாக்குறை இருப்பதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.
உப்புப் பற்றாக்குறைக்குத் தீர்வாக, இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் உப்பைச் சந்தையில் வாங்கும் வாய்ப்பு இப்போது மக்களுக்குக் கிடைத்துள்ளது.
ஒலங்கையில் வருடாந்த உப்பு நுகர்வு சுமார் 180,000 மெட்ரிக் தொன் ஆகும். கடந்த ஆண்டு பிற்பகுதியிலிருந்து ஏற்பட்ட சீரற்ற காலநிலையின் காரணமாக உப்பு உற்பத்தி வேகமாகக் குறைந்துள்ளது.

