வடமராட்சி கிழக்கு உடுத்துறை பகுதியில் ஒரு தொகை போதை பொருளுடன் இன்று செவ்வாய்க்கிழமை (8)அதிகாலை கடற்படையால் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்
வெற்றிலைக்கேணி கடற்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த நபர் உடுத்துறை கடற்பகுதியில் சுற்றிவளைக்கப்பட்டு கைது செய்யப்பட்டார்
8 உரப்பைகளில் ஈரமான நிலையில் போதை பொருள் காணப்படுவதால் மேலதிக விசாரணைகளின் பின்னர் போதைபொருள் மற்றும் சந்தேக நபர் மருதங்கேணி பொலிஸாரிடம் சட்ட நடவடிக்கைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளார்
போதை பொருளுடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கட்டைக்காட்டை சேர்ந்தவர் என்றும் சில மாதங்களுக்கு முன்பு ஒரு தொகை போதை பொருளுடன் கடற்படையால் கைது செய்யப்பட்டு சிறைத் தண்டனையின் பின் விடுதலை செய்யப்பட்டவர் என்று கடற்படை தெரிவித்துள்ளது