ஜனாதிபதி விளாடிமிர் ஜெலன்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புடனான ராஜதந்திர பதற்றங்களை எதிர்கொண்ட ஒரு நாளுக்குப் பிறகு, உக்ரைன் தனது பாதுகாப்புத் திறன்களை வலுப்படுத்த £2.26 பில்லியன் ($2.84 பில்லியன்) கடன் ஒப்பந்தத்தில் பிரிட்டனுடன் கையெழுத்திட்டுள்ளது.
உக்ரைனின் ராணுவ வலிமையை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட இந்தக் கடன், முடக்கப்பட்ட ரஷ்ய சொத்துக்களிலிருந்து கிடைக்கும் வருவாயைப் பயன்படுத்தி திருப்பிச் செலுத்தப்படும்.
இந்த ஒப்பந்தத்தில் இங்கிலாந்து நிதி அமைச்சர் ரேச்சல் ரீவ்ஸ் , உக்ரைன் நிதி அமைச்சர் செர்ஜி மார்ச்சென்கோ ஆகியோர் கையெழுத்திட்டனர்.அடுத்த வாரம் முதல் தவணை நிதி வழங்கப்பட உள்ளது.
5,000க்கும் மேற்பட்ட வான் பாதுகாப்பு ஏவுகணைகளை வாங்குவதற்கு உக்ரைனுக்கு 1.6 பில்லியன் பவுண்ள் (2 பில்லியன் அமெரிக்க டொலர்) பிரிட்டிஷ் ஏற்றுமதி நிதியைப் பயன்படுத்த இங்கிலாந்து அனுமதிக்கும் என்று பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் ஞாயிற்றுக்கிழமை அறிவித்தார்.
விளாடிமிர் ஜெலன்ஸ்கியின் இலண்டன் விஜயத்தின்போது போது உக்ரைனுக்கு இங்கிலாந்தின் அசைக்க முடியாத ஆதரவை பிரிட்டிஷ் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் மீண்டும் உறுதிப்படுத்தினார்.
Trending
- இலங்கைக்கான அமெரிக்க தூதுவராக எரிக் மேயர்!
- “ஜென்ம நட்சத்திரம்” திரைப்பட ட்ரெய்லர் வெளியீடு!
- ரி20 உலகக் கிண்ணப் போட்டிக்கு இத்தாலி தகுதி பெற்றது.
- இளையராஜாவிற்கு பதிலடி கொடுத்த வனிதா!
- எக்ஸ்-பிரஸ் பேர்ல் சுற்றுச்சூழல் பேரழிவை ஜனாதிபதி விசாரிக்க வேண்டும்
- காமன்வெல்த் சம்பியன்ஷிப்பில் இலங்கைக்கு தங்கம்
- பழங்குடியின மக்களுக்கு 78 ஆண்டுகளின் பின் மின்சாரம்!
- கபில்தேவ் சாதனையை முறியடித்த பும்ரா!