‘ஈ சாலா கப் நம்தே’ இந்த ஆண்டு கிண்ணம் நமதே என்ற பெங்களூர் ரசிகர்களின் கனவு 18 வருடங்களின் பின்னர் நிஜமானது.
பிரிமியர் அரங்கில் பெங்களூரு அணிக்காக தொடர்ந்து 18 ஆண்டுகளாக விளையாடுகிறார் கோலி. இவரது சீருடை இலக்கம் 18. தற்போதைய 18வது தொடரின் ராசி கைகொடுக்க, சம்பியன் கிண்ணத்திக் கைப்பற்றினார். ‘ஈ சாலா கப் நம்தே’ என்ற பெங்களூரு ரசிகர்களின் நீண்ட கால கனவு நனவானது. வெற்றி பெற்றதும் ஆனந்த கண்ணீரில் மிதந்தார் கோலி. பைனலை காண நேற்று அஹதாபாத் வந்த பெங்களூரு அணியின் முன்னாள் வீரர்கள் டிவிலியர்ஸ், கெய்ல் உடன் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார்.
நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடந்த பரபரப்பான இறுதிப் போட்டியில் பஞ்சாப் கிங்ஸை வீழ்த்தி ஆர்சிபி அணி தனது முதல் ஐபிஎல் பட்டத்தை வென்றது.
ஐபிஎல் , மகளிர் பிரீமியர் லீக் இரண்டிலும் பட்டங்களை வென்ற இரண்டாவது அணியாக ஆர்சிபி மாறியுள்ளது.
இறுதிப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பெங்களூர் 20 ஓவர்களில் 9 விக்கெற்களை இழந்து 190 ஓட்டங்கள் எடுத்தது. 191 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் களம் இறங்கிய பஞ்சாப் 20 ஓவர்களில் 7 விக்கெற்களை இழந்து 187 ஓட்டங்கள் எடுத்தது. 6 ஓட்டங்களால் தோல்வியடைந்த பஞ்சாப் அணி கடசி ஓவர் வரை பெங்களூருக்கு சவால் விட்டது.
4 விக்கெற்களை இழந்து 131 ஓட்டங்கள் எடுத்த பெங்களூருக்கு 10 பந்துகளில் 24 ஓட்டங்கள் எடுத்த ஜிதேஷ் சர்மா கைகொடுத்தார்.
கடைசி ஓவரில் அர்ஷ்தீப் சிங் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி ஆர்சிபி அணியை கட்டுப்படுத்தினார், கைல் ஜேமிசனும் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
பஞ்சாப் அணியின் ஆரம்பம் அசத்தலாக இருந்தது.பிரப்சிம்ரன் சிங் ம, பிரியான்ஷ் ஆர்யா ஜோடி 43 ஓட்டங்கள் சேர்த்து அ சத்தியது. பவர்பிளேயில் ஜோஷ் ஹேசில்வுட் ஆர்யாவை அவுட்டாக்கி, பார்ட்னர்ஷிப்பை முறியடித்தார்.பிரப்சிம்ரன், ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோரும் ஆட்டமிழந்ததால் பஞ்சாப் தடுமாறியது.
ஜோஷ் இங்கிலிஸ் எதிர் தாக்குதல் நடத்திய போதிலும், குருணால் பாண்டியாவின் பந்து வீச்சு ஆர்சிபி அணிக்கு உத்வேகத்தை அளித்தது.
அவர் நான்கு ஓவர்களில் 17 ஓட்டங்களுக்கு இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
கோலி தனது சிறந்த ஆட்டத்தில் இல்லாவிட்டாலும், அந்தப் போட்டியில் அவர் ஆர்சிபியின் அதிக ஓட்டங்கள் எடுத்த வீரராவார் அவர் 35 பந்துகலில் 43 ஓட்டங்கள் எடுத்தார்.
இதன் மூலம், ஐபிஎல்லில் பஞ்சாப் அணிக்கு எதிராக 1.159 எடுத்த அவர் அதிக பஞ்சபுக்கு எதிராக அதிக ஓட்டம் எடுத்த வீரரானார்.
முன்னதாக டேவிட் வானர் 1,134 ஓட்டங்கள் எடுத்திருந்தார்.