Friday, April 3, 2026 2:16 pm
ஈரானுக்கு எதிரான போரை அமெரிக்காவும் இஸ்ரேலும் நிறுத்த வேண்டும் என்றும், ஈரான் தனது அண்டை நாடுகளைத் தாக்குவதை நிறுத்த வேண்டும் என்றும் ஐக்கிய நாடுகள் சபையின் (ஐ.நா.) பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ், வியாழக்கிழமை மீண்டும் வேண்டுகோள் விடுத்தார்.
ஐக்கிய நாடுகள் சபையின் (ஐ.நா.) பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ், மேலும் தெரிவிக்கையில்,
“எனது செய்தி தெளிவாக உள்ளது. அமெரிக்காவும், இஸ்ரேலும்
, அளவற்ற மனிதத் துன்பங்களை விளைவித்து, ஏற்கனவே பேரழிவுகரமான பொருளாதார விளைவுகளைத் தூண்டிவரும் இந்தப் போரை நிறுத்த இதுவே சரியான தருணம். ஈரான், தனது அண்டை நாடுகளைத் தாக்குவதை நிறுத்த வேண்டும். மத்திய கிழக்கு நெருக்கடி அதன் இரண்டாவது மாதத்தில் நுழைந்துள்ளது.
அமைதியான பாதையைக் கண்டறிய இராஜதந்திர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன, அவை வெற்றிபெறத் தேவையான இடத்தையும் ஆதரவையும் பெற வேண்டும் – ஐ.நா. சாசனம் உட்பட சர்வதேச சட்டத்தில் உறுதியாக வேரூன்றியிருக்க வேண்டும்,” என்றும் தெரிவித்தார்.

