Friday, March 27, 2026 4:41 pm
ஈரான் தலைநகர் தெஹ்ரான் உட்பட, ஈரான் முழுவதும் உள்ள பாலிஸ்டிக் ஏவுகணைகள், வான் பாதுகாப்பு அமைப்புகள் உற்பத்தித் தளங்கள் மீது இரவோடு இரவாகத் தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேலிய இராணுவம் வெள்ளிக்கிழமை காலை தெரிவித்தது.
இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகளின் தகவல்படி, யாஸ்த் நகரில் உள்ள ஈரானின் ஏவுகணைகள், கடல் கண்ணிவெடிகள் தயாரிக்கும் முக்கிய ஆலையையும் இஸ்ரேலியத் தாக்குதல்கள் தாக்கியுள்ளன.
“இஸ்ரேலியப் பொதுமக்களை இலக்காகக் கொண்ட தாக்குதல்களின் வீச்சைக் குறைக்கும் நோக்கில், இஸ்ரேலியப் பாதுகாப்புப் படை (IDF) அந்த ஆட்சியின் பாலிஸ்டிக் ஏவுகணை அமைப்புக்கு எதிராக இடைவிடாமல் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது,” என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

