இஸ்ரேலின் தெற்கு துறைமுக நகரமான ஈலாட்டில் குறைந்தது 20 பேர் காயமடைந்த ட்ரோன் தாக்குதலுக்கு ஏமனின் ஹூதி குழு புதன்கிழமை இரவு பொறுப்பேற்றுள்ளது.
ஹூதி இராணுவ செய்தித் தொடர்பாளர் யஹ்யா சரியா, X இல் வெளியிட்ட அறிக்கையில், சூரிய அஸ்தமனத்திற்கு முன்பு அந்தக் குழு இரண்டு ட்ரோன்களை ஏவி, ஈலாட்டில் ஒரு இடத்தை குறிவைத்ததாகக் கூறினார்.செவ்வாயன்று எய்லாட் ,பீர் ஷேவா ஆகிய நகரை குறிவைத்து பல ட்ரோன்களை ஏவிய பின்னர், 24 மணி நேரத்திற்குள் இந்த நடவடிக்கை இரண்டாவது முறையாகும் என்று அவர் கூறினார்.
புதன்கிழமை மாலை ஏமனில் இருந்து ஏவப்பட்ட ஒரு ட்ரோன் ஈலாட்டைத் தாக்கியதாகவும், குறைந்தது 20 பேர் காயமடைந்ததாகவும், அவர்களில் இருவர் படுகாயமடைந்ததாகவும் இஸ்ரேலின் அவசர மருத்துவ சேவை , இராணுவம் முன்னதாக தெரிவித்தது.
இஸ்ரேலியர்கள் யூத புத்தாண்டான ரோஷ் ஹஷானாவைக் கொண்டாடிக் கொண்டிருந்தபோது இந்தத் தாக்குதல் நடந்தது, அப்போது எய்லாட் பொதுவாக இஸ்ரேலிய விடுமுறைக்கு வருபவர்களால் நிரம்பியிருந்தது.