Friday, February 21, 2025 10:58 am
இஸ்ரேலின் மத்திய பகுதியில் ஒரு வாகன நிறுத்துமிடத்தில் வியாழக்கிழமை மூன்று பேருந்துகள் வெடித்துச் சிதறின. இது பயங்கரவாதத் தாக்குதலாக இருக்கலாம் என்று அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். இதனால் யாரும் பாதிக்கப்படவில்லை. ஹமாஸ் நான்கு பணயக்கைதிகளின் உடல்களை காஸாவில் இருந்து திருப்பி அனுப்பியதை அடுத்து இஸ்ரேல் ஏற்கனவே துக்கத்தில் இருந்த ஒரு நாளில் இந்த குண்டுவெடிப்புகள் நடந்தன.
ஐந்து குண்டுகளும் ஒரே மாதிரியானவை என்றும், டைமர்கள் பொருத்தப்பட்டவை என்றும் இஸ்ரேலிய பொலிஸார் தெரிவித்தனர், மேலும் வெடிக்காத குண்டுகளை வெடிகுண்டு நிபுணர்கள் செயலிழக்கச் செய்து வருவதாகவும் தெரிவித்தனர்.

