காஸா பகுதியில் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்களுக்கு எதிராக திங்கட்கிழமை மேற்குக் கரை முழுவதும் பொது வேலைநிறுத்தம் நடைபெற்றது.
பாலஸ்தீனக் குழுக்கள் அழைப்பு விடுத்த வேலைநிறுத்தம் காரணமாக கடைகள், சந்தைகள், பள்ளிகள், பல்கலைக்கழகங்கள், வங்கிகள் பொது அலுவலகங்கள் என்பன் மூடப்பட்துடன், மேலும் போக்குவரத்து வழித்தடங்கள் நிறுத்தப்பட்டன.
மத்திய மேற்குக் கரை நகரமான ரமல்லாவில், நூற்றுக்கணக்கான பாலஸ்தீனியர்கள் காஸாவில் இஸ்ரேலிய “குற்றங்களை” கண்டித்து வீதிகளில் இறங்கி, பாலஸ்தீனியக் கொடியை அசைத்து, இஸ்ரேலிய தாக்குதல்களை நிறுத்தக் கோரி கோஷங்களை எழுப்பினர். நகர மையத்தின் தெருக்களில் அவர்கள் அணிவகுத்துச் சென்றனர்.