Wednesday, February 4, 2026 8:09 pm
காஸாவில் இஸ்ரேலிய தாக்குதல்களில் குறைந்தது 19 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர், அவர்களில் பெரும்பாலோர் பெண்கள் , குழந்தைகள் என்று மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்தனர். தாக்குதல்கள் தொடரும் என்றும், இஸ்ரேலிய வீரர்கள் மீதான போராளித் தாக்குதலுக்கு பதிலடியாக இது நடத்தப்படும் என்றும் இஸ்ரேல் கூறியது
கொல்லப்பட்ட பாலஸ்தீனியர்களில் 5 மாதக் குழந்தை , 10 நாட்களே ஆன ஒரு குழந்தை உட்பட ஐந்து குழந்தைகள்; ஏழு பெண்கள் , ஒரு துணை மருத்துவர் என்று மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்தனர்.

