காஸாவில் இஸ்ரேலிய இராணுவத்தின் துப்பாக்கிப் பிரயோகத்தில் 27 கொல்லப்பட்டனர் பலர் காயமடைந்தனர் என்று உள்ளூர் சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
பல வாரங்களாக காஸா பகுதியில் முற்றுகையிட்டு வரும் இஸ்ரேல், அங்கு ஒரு புதிய உதவி விநியோக ஆட்சியை திணிக்க முயற்சிக்கும் வேளையில், இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து மூன்றாவது நாளாக நடைபெற்று வருகின்றன .ரஃபாவில் உள்ள விநியோக மையத்திற்கு அருகில் நியமிக்கப்பட்ட அணுகல் பாதைகளை விட்டு வெளியேறிய தனிநபர்கள் குழு மீது தங்கள் படைகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.
உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை பத்திரிகையாளர்களால் சுயாதீனமாக கணக்கிட முடியவில்லை, ஆனால் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம், சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர், ரஃபாவில் உள்ள அதன் கள மருத்துவமனையில் 184 பேர் காயமடைந்ததாகவும், அவர்களில் 19 பேர் வந்தவுடன் இறந்துவிட்டதாகவும், எட்டு பேர் காயங்களால் சிறிது நேரத்திலேயே இறந்ததாகவும் கூறினார்
Trending
- தேசபந்து குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டது: சபாநாயகர் அறிவிப்பு
- யூடியூபில் கட்சி தொடங்கப்பட்ட கட்சி ஜப்பான் அரசியலையே உலுக்கியது
- 6பில்லியன் டொலர் நிதிமுடக்கம் ட்ரம்புக்கு எதிராக வழக்கு
- வலி வடக்கு காணிகளை விடுவிக்க கோரி ஊடக சந்திப்பு
- மும்பை இரயில் குண்டுவெடிப்பு 12 பேரும் விடுதலை
- 7 மாதங்களில் 198 யானைகள் பலி
- அறுகம்பே சபாத் இல்லத்தை அகற்றக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம்
- அம்பாந்தோட்டையில் உப்பு உற்பத்தி மீண்டும் தொடங்கியது