இங்கிலாந்தில் வெளிநாட்டவர்களின் குடியேற்றத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து, வலதுசாரி ஆர்வலர் டாமி ராபின்சன் தலைமையில் இலண்டன் நகரின் மையத்தில் ஒரு பெரிய பேரணி நடைபெற்றது.”யுனைட் தி கிங்டம்” என்ற பெயரில் நடந்த இந்தப் பேரணியில் சுமார் 1,10,000 ஆதரவாளர்கள் கலந்துகொண்டனர்.
“படகுகளை நிறுத்துங்கள்” , “அவர்களை வீட்டுக்கு அனுப்புங்கள்” போன்ற குடியேற்ற எதிர்ப்பு முழக்கங்களை அவர்கள் எழுப்பினர்.
அதே நேரத்தில், “ஸ்டாண்ட் அப் டு ரேசிசம்” என்ற குழுவின் தலைமையில் சுமார் 5,000 பேர் பாசிசத்திற்கு எதிரான அணிவகுப்பு என்ற தலைப்பில் இதற்கு எதிராக எதிர்ப்புப் பேரணியை நடத்தினர்.
இந்த இரு குழுக்களுக்கும் இடையே பதற்றம் அதிகரித்த நிலையில், சில ராபின்சன் ஆதரவாளர்கள் எதிர்ப்பாளர்களையும், பொலிஸாரையும் நோக்கிப் போத்தல்களையும் பிற பொருட்களை வீசினர்.
நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வர, 1,000 க்கும் மேற்பட்ட பொலிஸார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டனர்.இந்த வன்முறைச் சம்பவங்களில், இதுவரை ஒன்பது பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனால் குடியேற்றம் தொடர்பான பிரிட்டனின் தேசிய விவாதத்தை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.
குறிப்பாக, சிறிய படகுகள் மூலம் ஆங்கிலக் கால்வாயைக் கடந்து வரும் அகதிகளின் நெருக்கடி, அரசியல் விவாதங்களில் ஒரு பெரிய பிளவை ஏற்படுத்தியுள்ளது.
ஹேங்அவுட் என்ற வலதுசாரி அரசியல்வாதி எரிக் செம்மூர் மற்றும் எலான் மஸ்க் உள்ளிட்ட சர்வதேசப் பிரமுகர்களின் ஆதரவு, இந்தப் பேரணிக்கு மேலும் முக்கியத்துவம் அளித்தது.