சிறிய விமானம் விபத்துக்குள்ளானதை அடுத்து சவுத்எண்ட் விமான நிலையம் மூடப்பட்டது. “கடுமையான சம்பவம்” காரணமாக “மறு அறிவிப்பு வரும் வரை மூடப்படும்” என்று சவுத்எண்ட் விமான நிலையம் தெரிவித்துள்ளது.
“இலண்டன் சவுத்எண்ட் விமான நிலையம் வழியாக (திங்கட்கிழமை) பயணிக்க வேண்டிய பயணிகள் தகவல் , ஆலோசனைக்காக தங்கள் விமான நிறுவனத்தைத் தொடர்பு கொள்ளுமாறு நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்,” என்றுதெரிவிக்கப்படுகிறது.இந்த சம்பவத்தில் சிக்கிய விமானம் பீச் பி200 சூப்பர் கிங் ஏர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.