சட்டவிரோதமாக நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட வாகனத்தின் உரிமம் மாற்றத்திற்கு அனுமதியளித்த குற்றச்சாட்டின் கீழ், மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் (DMT) பிரதி ஆணையாளர் ஒருவர் நேற்று புதன்கிழமை (5) இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட துணை ஆணையாளர் ரம்புக்கனை பகுதியைச் சேர்ந்தவர் எனவும், அவர் மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் அம்பாந்தோட்டை அலுவலகத்திற்கு நியமிக்கப்பட்டு தற்போது பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களம் அறிக்கை ஒன்றை வௌியிட்டு தெரிவித்துள்ளது.
சந்தேக நபர் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, 25,000 ரூபா ரொக்கப் பிணையிலும், தலா 500,000 ரூபா மதிப்புள்ள ஐந்து சரீரப் பிணைகளிலும் விடுவிக்கப்பட்டதுடன், இதற்கு மேலதிகமாக, குறித்த நபருக்கு வெளிநாட்டு பயணத் தடையும் விதிக்கப்பட்டுள்ளது.
Trending
- ஃபெராராவுடன் மீண்டும் இணைந்தார் ஜானிக் சின்னர்
- ஓபரா ஹவுஸுக்கு மெலனியா ட்ரம்பின் பெயரை வைக்க கோரிக்கை
- ஜப்பான் பிரதமர் இஷிபா இராஜினாமா?
- ரணிலின் 2022 அவசரகால பிரகடனம் அரசியலமைப்பிற்கு முரணானது உச்ச நீதிமன்றம்
- இலங்கை இளைஞர்களிடையே அதிகரித்து வரும் வாய் புற்றுநோய்
- இலங்கையில் 507 மில்லியன் அமெரிக்க டொலர் வெளிநாட்டு முதலீடு
- யானைக் கொல்பவர்களுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் – ராகுல தேரர்
- சூரிய கிரகணத்தால் இருளில் மூழ்கும் பூமி