இலங்கை மத்திய வங்கி அதன் 75வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் புதிய 2000 ரூபா நாணயத்தாள் ஒன்றை ஞாபகார்த்தமாக வெளியிட்டுள்ளது.
முதல் நாணயத்தாள் இன்று ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற வைபவத்தில் ஆளுநர் டாக்டர் நந்தலால் வீரசிங்கவால் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவிடம் அதிகாரப்பூர்வமாககையளிக்கப்பட்டது.
இந்த நாணயத்தாள் சி இலங்கை மத்திய வங்கியினால் வெளியிட்ட ஐந்தாவது நினைவு நாணயத்தாள் ஆகும், இது “செழிப்புக்கான ஸ்திரத்தன்மை” என்ற கருப்பொருளைக் கொண்டுள்ளது, இது தேசிய வளர்ச்சிக்கான பொருளாதார ஸ்திரத்தன்மையை வலுப்படுத்துவதற்கான வங்கியின் உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது.