Sunday, March 23, 2025 10:33 am
இலங்கை , தாய்லாந்து ஆகிய நாடுகளுக்கிடையேயான 6வது சுற்று இருதரப்பு அரசியல் ஆலோசனைகள் மார்ச் 25 அன்று பாங்காக்கில் உள்ள தாய்லாந்து வெளியுறவு அமைச்சகத்தில் நடைபெறும்.
இலங்கையின் வெளியுறவு செயலாளர் அருணி ரணராஜா , தாய்லாந்தின் வெளியுறவுக்கான நிரந்தர செயலாளர் எக்சிரி பின்தருச்சி ஆகியோர் கூட்டத்திற்கு இணைந்து தலைமை தாங்குவார்கள்.
இரு நாடுகளும் இராஜதந்திர உறவுகளின் 70 ஆண்டுகளைக் கொண்டாடும் வேளையில், வர்த்தகம், முதலீடு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, மீன்வளம், பாதுகாப்பு, கலாச்சாரம் மற்றும் சுற்றுலா ஆகியவற்றில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து விவாதங்கள் கவனம் செலுத்தும்.

