யூனிலீவர் நிறுவனம் தனது புதிய தானிய மற்றும் பான உணவு தொழிற்சாலையை சபுகஸ்கந்த லிண்டல் தொழிற்பேட்டையில் நேற்று சனிக்கிழ்மை [22]திறந்து வைத்தது, இது தெற்காசியாவில் நிறுவனத்தின் மிகப்பெரிய முதலீடாகும். அமைச்சர் சுனில் ஹந்துன்னெட்டி தலைமையில் இந்த பிரமாண்ட திறப்பு விழா நடைபெற்றது. இந்த அதிநவீன வசதியான யூனிலீவரின் இலங்கையில் நான்காவது தொழிற்சாலை, 3.8 பில்லியன் ரூபா முதலீட்டுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.