இலங்கையில் மழை மற்றும் கடல் கொந்தளிப்பாக இருக்கும் என வானியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேற்கு சபரகமுவ மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி நுவரெலியா ஆகிய மாவட்டங்களிலும் இன்று அவ்வப்போது மழை பெய்யும் என வானிலை ஆய்வுத் திணைக்களம் கணித்துள்ளது.
வடமேற்கு மாகாணத்திலும் சில இடங்களில் மழை பெய்யக்கூடும்.
மத்திய மலைகளின் மேற்கு சரிவுகள், மத்திய, வடக்கு, வடமத்திய .ம் வடமேற்கு மாகாணங்கள் ,திருகோணமலை, அம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களில் மணிக்கு 30-40 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.
காலி முதல் பொத்துவில் வரையிலும், சிலாபம் முதல் காங்கேசன்துறை வரையிலும் கடற்கரையை ஒட்டியுள்ள கடல் பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 50-60 கி.மீ வரை அதிகரிக்கக்கூடும் என்பதால், மீனவர்கள் விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இந்தப் பகுதிகளில் கடல் கொந்தளிப்பாக இருக்கும் என்றும், அலைகள் 2.5-3.0 மீற்றர் வரை உயரக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.