Friday, January 16, 2026 2:46 pm
வெளிநாடுகளில் மறைந்திருக்கும் 95 சந்தேக நபர்களுக்கு இன்டர்போல் சிவப்பு அறிவிப்புகளை இலங்கை பெற்றுள்ளது.என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் (SSP) F.U. வூட்லர் வெள்ளிக்கிழமை அறிவித்தார். ஒழுங்கமைக்கப்பட்ட சிண்டிகேட்கள், ஒன்லைன் மோசடிகளில் ஈடுபட்டுள்ள உயர்மட்ட குற்றவாளிகளை நாடு கடத்துவதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளில் இந்த நடவடிக்கை குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் குறிக்கிறது.
2024 ஆம் ஆண்டில், இன்டர்போல் வழியாக 10 சந்தேக நபர்களை இலங்கைகு கொண்டு வரப்பட்டனர். இது 2025 ஆம் ஆண்டு வரை தொடர்ந்தது, மேலும் 11 சந்தேக நபர்கள் விசாரணையை எதிர்கொள்ள மீண்டும் கொண்டு வரப்பட்டனர். “2024–2025 காலகட்டத்தில், 21 சந்தேக நபர்கள் நாடுகடத்தல் சட்டத்தின் கீழ் நாடு கடத்தப்பட்டனர்,” என்று எஸ்எஸ்பி வூட்லர் கூறினார்.
தப்பியோடியவர்களில் பலர் வெளிநாடுகளில் பாதுகாப்பான புகலிடங்களிலிருந்து குற்றச் செயல்களை – அதிநவீன ஒன்லைன் மோசடிகள் உட்பட – ஒருங்கிணைத்து வருவதாக SSP வூட்லர் எடுத்துரைத்தார். இந்த நடவடிக்கைகள் சர்வதேச ஒத்துழைப்பை பெரிதும் நம்பியுள்ளன என்று அவர் வலியுறுத்தினார்.
“இந்த நடவடிக்கைகள் அபுதாபி சர்வதேச பொலிஸ், துபாய் பொலிஸ் இலங்கை தூதரக பணிகள் உட்பட ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசாங்கத்தின் வலுவான ஆதரவுடன் மேற்கொள்ளப்பட்டன,” என்று அவர் கூறினார்.

