Tuesday, January 20, 2026 1:07 pm
கொழும்பு, யாழ்ப்பாணம், கண்டி, குருநாகல் , காலி போன்ற இலங்கையின் பல நகர்ப்புறங்கள் கடந்த 24 மணி நேரத்தில் அதிக PM2.5 செறிவு காரணமாக சற்று ஆரோக்கியமற்ற காற்றின் தர அளவைக் கொண்டிருந்ததாக தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பின் தரவுகள் தெரிவிக்கின்றன.
நுவரெலியா, முல்லைத்தீவு , மட்டக்களப்பு போன்ற நகரங்கள் மிதமான காற்றின் தரத்தைப் பேணி வந்தன. இந்த நிலைமைகள் மற்றொரு நாளுக்கு நீடிக்கக்கூடும் என்றும், பெரும்பாலான நகரங்களில் AQI அளவுகள் 48 முதல் 140 வரை இருக்கும் என்றும் NBRO கணிப்புகள் தெரிவிக்கின்றன.

