அவுஸ்திரேலிய துணைப் பிரதமரும் பாதுகாப்பு அமைச்சருமான ரிச்சர்ட் மார்லஸ் இன்று (3) உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வந்தடைந்தார். அவரை துணை அமைச்சர் சுனில் வட்டகல வரவேற்றார். ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் , பிரதமர் ஹரிணி அமரசூரிய ஆகியோரை மார்லஸ் சந்திப்பார்.அவர் துணைப் பாதுகாப்பு அமைச்சர் அருணா ஜெயசேகரவுடன் பாதுகாப்பு பேச்சுவார்த்தைகளை நடத்த உள்ளார்.