இரண்டு மலைகளுக்கு இடையே ஒரு கிலோமீற்றருக்கு மேல் எந்த ஆதரவும் இல்லாமல் செயல்படும் கேபிள் கார் திட்டங்கள் உலகில் அரிதானவை. இந்த ஆண்டு இறுதிக்குள் இலங்கை மக்கள் இந்த அரிய வாய்ப்பை அனுபவிக்கும் வாய்ப்பைப் பெறுவார்கள்.
அம்புலுவாவா , , பல்லுயிர் வளாகம் முதல் கம்போலாவில் உள்ள அம்புலுவாவா மலையின் உச்சி வரை அங்கிருந்து அம்புலுவாவா விவசாய கோபுரம் வரை 1.8 கி.மீ தூரத்தை உள்ளடக்கிய நாட்டின் முதல் கேபிள் கார் திட்டம் சீன அமெரிக்க முதலீட்டாளர்களின் கூட்டு முயற்சியுடன் ஆரம்பமாகி உள்ளது.
இந்த திட்டத்தின் முதல் கட்டம் இந்த ஆண்டு ஒக்டோபர் மாதத்திற்குள் முடிக்கப்பட உள்ளது.
இலங்கைக்கான சீனத் தூதர் குய் ஜென்ஹோங் , அம்புலுவாவா அறக்கட்டளையின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அனுராத ஜெயரத்ன ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை அம்புலுவாவாவுக்குச் சென்று பார்வையிட்டனர்.
Trending
- ட்ரம்ப் விதித்த புதிய வரி – ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட விசேட பரிந்துரைக்குழு
- குஜராத் டைட்டன்ஸ் அணி அபாய வெற்றி
- இலங்கை வரும் இந்திய பிரதமர் மீனவர் விவகாரத்திற்கு தீர்வு வழங்க வேண்டும்
- துப்பாக்கிகளை ஒப்படைக்காத 42 பேர் மீது குற்றச்சாட்டு
- தபால் மூல வாக்களிப்புக்காக 700,000 பேருக்கு விண்ணப்பம்
- பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை வருகை -விசேட போக்குவரத்து
- ஜனாதிபதி நிதியத்திலிருந்து பணம் பெற்றதாக குற்றச்சாட்டு
- அநுராதபுரம் ஏ-9 வீதியில் விபத்து