Monday, June 16, 2025 10:20 am
இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையில் நடந்து வரும் மோதல் காரணமாக, இஸ்ரேலில் இரண்டு இலங்கையர்கள் காயமடைந்துள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கை தூதர் நிமல் பண்டார தெரிவித்தார்.
இஸ்ரேலில் உள்ள பேட் யாம் பகுதியில் சனிக்கிழமை ஏவுகணைத் தாக்குதலில் இலங்கைப் பெண் ஒருவர் தோளில் காயமடைந்ததாகவும், ஞாயிற்றுக்கிழமை பினெய் பிராக் பகுதியில் ஈரானிய ஏவுகணைத் தாக்குதலில் இலங்கை கட்டுமானத் தொழிலாளி ஒருவரின் காலில் காயம் ஏற்பட்டதாகவும் தூதர் நிமல் பண்டார தெரிவித்தார்.
அவகளுக்குத் தேவையான மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

