ஆசியக் கிண்ண இறுதிப் போட்டிக்கு முன்னதாக இந்தியா, பாகிஸ்தான் ஆகிய அணிகளின் கப்டன்கள் கலந்துகொள்ளவிருந்த பாரம்பரியப் போட்டோஷூட்டில் இந்திய கிரிக்கெட் அணியின் கப்டன் சூர்யகுமார் யாதவ் கலந்துகொள்ள மறுத்துள்ளார்.
இறுதிப் போட்டிக்கான தீவிரப் பயிற்சியில் கவனம் செலுத்த விரும்புவதாகக் கூறி, கப்டன் சூர்யகுமார் யாதவ் இதனைத் தவிர்த்துவிட்டதாகத் தகவல் வெளியானது. சூர்யகுமார் யாதவின் இந்த முடிவுக்கு இந்திய அணி நிர்வாகம், போட்டிக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதாகவும், தேவையற்ற கவனச்சிதறலைத் தவிர்க்க விரும்புவதாகவும் விளக்கம் அளித்துள்ளது.
இந்தத் திடீர் முடிவு , அதற்குப் பாகிஸ்தான் கப்டனின் எதிர்வினை ஆகியவை, ரசிகர்களிடையே இறுதிப் போட்டிக்கான எதிர்பார்ப்பையும், போட்டியின் பரபரப்பையும் மேலும் அதிகரித்துள்ளது.