Tuesday, January 13, 2026 7:58 pm
ஈரானில் பொருளாதாரம் நலிவடைந்து விலைவாசி உயர்ந்ததால் கடந்த டிசம்பர் 28ஆம் திகதி மக்கள் சாலைகளில் இறங்கி போராட தொடங்கினார்கள். ஈரானின் அதிபர் கமேனி ஆட்சி மற்றும் ஊழலுக்கு எதிராக போராட்டம் தீவிரமானது. அப்போது அரசு தரப்பில் போராட்டக்காரர்களை ஒடுக்க பாதுகாப்பு படையினர் களமிறங்கினார்கள். அவர்களுக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் உருவானது. அப்போது, அவர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் இதுவரை 600 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக சொல்லப்படுகிறது.
மேலும் 10,600 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் கடவுளின் எதிரிகளாக கருதப்படுவார்கள்.. அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படும் என ஈரான் அரசு கடுமையாக எச்சரித்து இருக்கிறது.. ஆனாலும் போராட்டம் நின்றபாடில்லை. ஒரு பக்கம் ஈரான் அரசுக்கு எதிரான அந்நாட்டு மக்களின் போராட்டத்திற்கு அமெரிக்க அதிபர் டொனல்ட் டிரம்ப் ஆதரவு தெரிவித்திருக்கிறார்.
தேவைப்பட்டால் ஈரான் நாடு மக்களுக்கு ஆதரவாக ஈரான் மீது தாக்குதல் நடத்தவும் தங்கள் தயார் என அமெரிக்க அறிவித்திருக்கிறது. எனவே விரைவில் அமெரிக்கா, ஈரான் இடையே போர் உருவாகும் என்கிற அச்சம் ஏற்பட்டு இருக்கிறது. இந்த பிரச்சனையை முடிவுக்கு கொண்டுவர இஸ்லாமிய நாடுகளின் தலைவர்கள் முயன்று வருகிறார்கள்.

