ஆன்லைனி ரயில் டிக்கெட் மோசடியை தற்காலிகமாகத் தடுக்க டிஜிட்டல் அமைச்சும், பிற நிறுவனங்களின் தகவல் தொழில்நுட்ப வல்லுநர்களும் உதவியுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். இலங்கை ரயில்வே புதிய கட்டாய அடையாள சரிபார்ப்பு முறையை அறிமுகப்படுத்தியுள்ளது.
டிக்கெட் முன்பதிவு தளத்தை மேலும் பாதுகாப்பானதாக மாற்ற இன்னும் மேம்படுத்தல்கள் தேவை என்றும், மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது வழக்குத் தொடர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் கூறினார்.
புதிய கொள்கையின் கீழ், இலங்கை பயணிகள் தங்கள் தேசிய அடையாள அட்டை இலக்கத்தை வழங்க வேண்டும், வெளிநாட்டினரொன்லைனில் அல்லது கவுண்டர்களில் முன்பதிவு செய்யும் போது தங்கள் பாஸ்போர்ட் இலக்கத்தை வழங்க வேண்டும். டிக்கெட் சோதனைகளின் போது அசல் அடையாள ஆவணங்களும் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
இன்று, கொழும்பு-பதுளை “பொடிமெனிகே” ரயில், விட குறைவான பயணிகளுடன் சென்றதாகக் கூறப்படுகிறது, ஏனெனில் சில டிக்கெட் வைத்திருப்பவர்கள் அடையாள அட்டை விவரங்கள் இல்லாததால் ஏற முடியவில்லை.
கண்டி-எல்லா போன்ற பிரபலமான சுற்றுலா வழித்தடங்களில், கள்ளச் சந்தை டிக்கெட் விற்பனையை நிறுத்துவதே இந்த நடவடிக்கையின் நோக்கமாகும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர். அங்கு இருக்கைகள் சாதாரண விலையை விட நான்கு முதல் ஐந்து மடங்கு வரை மறுவிற்பனை செய்யப்பட்டுள்ளன.