Tuesday, October 7, 2025 10:28 am
இயற்பியலுக்கான நோபல் ஜான் கிளார்க், மைக்கேல் H. டெவோரெட், ஜான் எம். மார்ட்டினிஸ் ஆகியோருக்கு வழங்கப்பட்டாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு துறைகளில் தலைசிறந்து விளங்குவோருக்கு நோபல் பரிசு வழங்கப்படும். அதன்படி இந்தாண்டிற்கான நோபல் பரிசு குறித்த அறிவிப்பு நேற்று முதல் அறிவிக்கப்பட்டு வருகிறது. முதல் நாளான நேற்று மருத்துவத் துறைக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது.
இரண்டாம் நாளான இன்று 2025ம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. ஜான் கிளார்க், மைக்கேல் H. டெவோரெட், ஜான் எம். மார்ட்டினிஸ் ஆகியோருக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. மின்காந்தச் சுற்றில், மேக்ரோஸ்கோபிக் குவாண்டம் மெக்கானிக்கல் டன்னலிங் ஆகியவை குறித்த ஆய்வுக்காக இந்த மூவருக்கும் இயற்பியலுக்கான நோபல் பரிசு பகிர்ந்து அளிக்கப்படுகிறது.

