Wednesday, February 18, 2026 9:24 am
உலககோக் கிண்ணத்தை வென்ற பாகிஸ்தான் முன்னாள் கேப்டனும் முன்னாள் பிரதமருமான இம்ரான் கானுக்காக மனிதாபிமான அடிப்படையில் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான்கள் கபில்தேவ் கவாஸ்கர் உள்பட 14 கப்டன்கள் பாகிஸ்தான் அரசாங்கத்துக்கு அவசர கடிதம் எழுதி உள்ளனர்
ஸ்டீவ்வாக் டூ நாசர் ஹுசைன் , மைக்கேல் அதெர்டன், ஆலன் பார்டர், மைக்கேல் பிரியர்லி, கிரேக் சப்பல், இயான் சப்பல், பெலி,சுனில் கவாஸ்கர் உள்ளிட்டவர்கள் கையெழுத்திட்டுள்ளனர்.
அந்தக் கடிதத்தில் ‛‛பாகிஸ்தான் கிரிக்கெட்அணிக்கு 1992 உலகக் கோப்பையை வென்ற அணிக்கு தலைமை தாங்கியவர் இம்ரான் கான். இப்போது உடல்நலக் குறைபாடுகளுடன் சிறையில் இருக்கிறார். இவருக்கு உடனடியாகவும், கண்ணியமான முறையிலும் மருத்துவ சிகிச்சை வழங்க வேண்டும். பாகிஸ்தானின் புகழ்பெற்ற முன்னாள் கேப்டனும், உலக கிரிக்கெட்டின் ஜாம்பவானுமான இம்ரான் கானுக்கு வழங்கப்படும் சிகிச்சை மற்றும் சிறையில் அவர் நடத்தப்படும் விதம் பற்றி நாங்கள் கவலை கொண்டுள்ளோம். அதனால் தான் இந்த கடிதத்தை எழுதுகிறோம் என எழுதப்பட்டுள்ளது.
இதுபற்றிய வழக்கை விசாரித்த அந்த நாட்டின் உச்சநீதிமன்றம் இம்ரான் கானுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள உத்தரவிட்டது. இதையடுத்து அடியாலா சிறையில் உள்ள இம்ரான் கானுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வரும் நிலையில் இந்த கடிதம் எழுதப்பட்டுள்ளது. முன்னதாக பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் வாசீம் அக்ரம் கூட, இம்ரான் கானுக்குச் சிறந்த மருத்துவ சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தார். மேலும் இம்ரான் கானின் உடல்நலக் குறைபாடு தனக்கு மிகுந்த வருத்தம் அளிப்பதாக கவலை தெரிவித்து இருந்தார்.

