இமாச்சலப் பிரதேசம் கடுமையான பருவமழை நெருக்கடியை எதிர்கொள்கிறது. ஜூன் 20 ஆம் திகதி பருவமழை தொடங்கியதிலிருந்து, அங்கு 72 பேர் இறந்துள்ளனர், 40 பேர் காணாமல் போயுள்ளனர், மேலும் 100 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என்று முதலமைச்சர் சுக்விந்தர் சிங் சுகு உறுதிப்படுத்தினார்.
து, ஏற்கனவே 700 கோடி ரூபா அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
இருப்பினும் மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தின் ஆரம்ப புள்ளிவிவரங்கள் 41 கோடி ரூபா இழப்பு ஏற்பட்டுள்ளதாக மதிப்பிட்டுள்ளன.
மிக மோசமாக பாதிக்கப்பட்ட மாவட்டமான மண்டியில் மட்டும் 176 வீதிகள் மூடப்பட்டுள்ளதாகவும், இதனால் மாநிலம் முழுவதும் 500க்கும் மேற்பட்ட வீதிகள் சேதமடைந்துள்ளதாகவும், 14 பாலங்கள் அடித்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின்சாரம் ,நீர் விநியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது, 500க்கும் மேற்பட்ட மின்மாற்றிகள் செயல்படவில்லை, 281 நீர் வழங்கல் திட்டங்கள் சேதமடைந்துள்ளன.
300க்கும் மேற்பட்ட கால்நடைகள் இறந்துள்ளன, நூற்றுக்கணக்கான வீடுகள் இடிந்துள்ளன.
இதற்கிடையே, காங்க்ரா, சிர்மௌர் மற்றும் மண்டி மாவட்டங்களில் மிக அதிக மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.