அவுஸ்திரேலியாவுக்கு எதிராக காலியில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை இன்னிங்ஸாலும் 242 ஓட்டங்களாலும் தோல்வியடைந்தது.நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலியா முதலில் துடுப்பெடுத்தாடி 6 விக்கெற்களை இழந்து 645 ஒட்டங்கள் எடுத்து ஆடத்தை நிறுத்தியது.
உஸ்மான் கவாஜா இரட்டை சதத்தை அடித்து 232 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். கப்டன் ஸ்டீவ் ஸ்மித் 10000 ஓட்டங்க்களைக் கடந்து 141 ஓட்டங்கள் அடித்தார். அறிமுகப் போட்டியில் மிரட்டிய ஜோஸ் இங்லீஷ் 102 ஓட்டங்கள் எடுத்தார். ஃஜெப்ரி வாண்டர்சே, பிரபத் ஜெயசூர்யா தலா 3 விக்கெட்டுகள் எடுத்தார்கள்.
முதல் இன்னிங்ஸில் இலங்கை சகல விக்கெற்களையும் இழந்து 165 ஓட்டங்கள் எடுத்தது. மேத்தியூ குனேமான் 5, நேதன் லயன் 3 விக்கெற்களை வீழ்த்தினர்.
ஃபாலோ ஆன் பெற்று விளையாடிய இலங்கை மீண்டும் சகல விக்கெற்களையும் இழந்து 247 ஓட்டங்கள் எடுத்தது.. அதிகபட்சமாக ஜெஃப்ரி வேண்டர்சே 53 ஓட்டங்கள் எடுத்தார். மேத்யூ குனேமான் 4, நேதன் லயன் 4 விக்கெட்டுகளை எடுத்தார்கள். இன்னிங்ஸ் , 242 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வென்ற அவுஸ்திரேலியா டெஸ்ட் கிரிக்கெட்டில் இலங்கைக்கு எதிராக தங்களுடைய பெரிய வெற்றியைப் பதிவு செய்து சாதனை படைத்தது. 1 – 0* என்ற கணக்கில் இத்தொடரில் ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றுள்ளது.உஸ்மான் கவாஜா ஆட்டநாயகன் விருதைப் பெற்றார்.
Trending
- அதிவேக வீதிகளில் டெபிட்,கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்தலாம்
- ரணிலுக்கு லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு அழைப்பாணை
- அதிமுகவுடன் கூட்டணி அறிவித்தார் அமித்ஷா
- உயிருடன் இருப்போரை இறந்ததாக அறிவித்த ட்ரம்ப் நிர்வாகம்
- அவுஸ்திரேலியாவில் இந்திய துணை தூதரகத்தை தாக்கிய மர்ம நபர்கள்
- கயல் நடிகர் பிரபாகரன் மரணம்
- பொன்முடியின் பதவியைப் பறித்த ஸ்டாலின்
- தமிழகத்தில் அமித்ஷா கூட்டணித் தலைவர்கள் சந்திப்பு