கனடாவின் லிபரல் கட்சியின் தலைமைப் போட்டியில் இருந்து இந்திய-கனடிய அரசியல்வாதியான ரூபி தல்லா தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.இந்த முடிவு நாட்டின் அடுத்த பிரதமராகும் அவரது முயற்சியை முடிவுக்கு கொண்டு வந்துள்ளது.
தகுதி நீக்கம் குறித்து தல்லா தனது அதிருப்தியை வெளிப்படுத்தி, இது ஏமாற்றமளிப்பதாக தெரிவித்துள்ளார்.இந்த முடிவு ஊடகங்களுக்கு கசிந்ததாகவும், தனக்கு எதிரான குற்றச்சாட்டுகள் தவறானவை மற்றும் ஜோடிக்கப்பட்டவை என்றும் அவர் கூறினார்.
தனது அதிகரித்து வரும் ஆதரவு கட்சியில் சில சிலருக்கு அச்சுறுத்தலாக மாறியதாக தல்லா சூசகமாகக் கூறினார். வெளிநாட்டு தலையீடு மற்றும் பிரச்சார விதி மீறல்களில் ஈடுபட்டதாக தகுதிநீக்கம் செய்யப்பட்ட நிலையில், அவை சக வேட்பாளர் மார்க் கார்னியுடன் விவாதம் செய்வதைத் தடுக்கும் முயற்சிகள் என்று அவர் நிராகரித்தார்.
தல்லாவின் அரசியல் பயணம் மற்றும் பிரச்சார வாக்குறுதிகள்
கடந்த ஜனவரி மாதம் ஜஸ்டின் ட்ரூடோ கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்த பிறகு, தல்லா தனது வேட்புமனுவை றிவித்அதார்தாக்கல் செய்தார். சட்டவிரோத குடியேறிகளை நாடு கடத்துவதாகவும், மனித கடத்தலை எதிர்த்துப் போராடுவதாகவும் அவரது பிரச்சாரம் இருந்தது.
முன்னதாக, அவர் 2004-2011 வரை பிராம்ப்டன்-ஸ்பிரிங்டேலின் எம்பியாக இருந்தார்.தகுதி நீக்கம் செய்யப்பட்ட போதிலும், கனடியர்களுக்காக தொடர்ந்து போராடுவதற்கான தனது உறுதிப்பாட்டை தல்லா மீண்டும் வலியுறுத்தினார்.
இந்தியா தனது பிரச்சாரத்தில் தலையிடுவதாக கனடா ஊடக அறிக்கைகளை தல்லா நிராகரித்த ஒரு நாளுக்குப் பிறகு இது நடந்தது குறிப்பிடத்தக்கது.
Trending
- இலங்கை வந்தார் இந்தியப் பிரதமர் மோடி
- நடிகர் மற்றும் பிக்பாஸ் போட்டியாளர் தர்ஷன் கைது
- பூஸ்ஸா சிறைச்சாலையில் கைதி ஒருவர் உயிரிழப்பு
- ராமேஸ்வரம் வரும் பிரதமர் மோடி
- கட்டுநாயக்காவில் 528 மொபைல்களுடன் ஒருவர் கைது
- செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது சீனா
- அமெரிக்காவின் வாகன வரிகளுக்கு சீனாவின் வாகனத் தொழில் சங்கம் எதிர்ப்பு
- இஸ்ரேலிய தாக்குதல்களில் 24 மணி நேரத்தில் 97 பேர் கொலை