பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, இந்திய விமானப்படை (IAF) ஆக்ரமன் பயிற்சியை தொடங்கியுள்ளது.இந்த பயிற்சி அதன் செயல்பாட்டுத் தயார்நிலை மற்றும் வலிமையை எடுத்துக் காட்டும் வகையில் அமைந்துள்ளது.
இந்தப் பயிற்சியில் அம்பாலா , ஹஷிமாரா தளங்களிலிருந்து ரஃபேல் போர் விமானங்கள், எல்லைப் பகுதிகளுக்கு அருகில் இரவு முழுவதும் இயங்கும் போக்குவரத்து விமானங்கள் முக்கியமாக இடம்பெற்றன.
வான்வழி எச்சரிக்கை மற்றும் கட்டுப்பாட்டு அமைப்பு (AWACS) விமானங்கள் நிறுத்தப்பட்டதன் மூலம் கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டன.அதே நேரத்தில் பாகிஸ்தான் ஜெட் விமானங்களும் அருகிலுள்ள வான்வெளியைக் கண்காணித்தன.
இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை என இந்திய ஆயுதப்படைகள் அனைத்தும் அதிக எச்சரிக்கையில் வைக்கப்பட்டுள்ளன.ரஃபேல் ஜெட் விமானங்கள் இப்போது மேற்கு எல்லையில் வான்வழி ரோந்துகளை நடத்தி வருகின்றன, அதே நேரத்தில் தரைப்படைகள் விரிவான பாதுகாப்பு சோதனைகளை மேற்கொண்டு பயங்கரவாத மறைவிடங்களை அகற்றி வருகின்றன.
அதிகரித்த பதட்ற்றங்களுக்கு மத்தியில், நிலைமையை மதிப்பிடுவதற்காக இராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி ஸ்ரீநகருக்கு சென்றுள்ளார்.