இந்தியா,இலங்கை ஆகிய நாடுகளுக்கிடையே ஆட்டோமொபைல் துறையில் ஒத்துழைப்பு , மேம்பாட்டை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டு, இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் (SIAM) 18 பேர் கொண்ட குழு இலங்கைக்கு இரண்டு நாள் விஜயம் மேற்கொண்டது.
இந்தக் குழுவில் வணிக வாகனங்கள், பயணிகள் வாகனங்கள், இரு சக்கர வாகனங்கள் , மூன்று சக்கர வாகனங்கள் உட்பட அனைத்துப் பிரிவுகளிலும் உள்ள முன்னணி இந்திய வாகன உற்பத்தியாளர்களின் பிரதிநிதிகள் இடம்பெற்றிருந்தனர்.
கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டு அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி ,கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டு பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க நிதி அமைச்சு, இலங்கை முதலீட்டு வாரியம் (BOI) சிலோன் மோட்டார் வர்த்தகர்கள் சங்க உறுப்பினர்களின் மூத்த அதிகாரிகளுடனும் இந்தக் குழு சந்தித்தது.