துபாயில் நடைபெறும் சம்பியன் கிண்ணப் போட்டியில் இந்தியாவுக்கு எதிராக விளையாடிய பாகிஸ்தான் முதலில் துடுப்பெடுத்தாடி 49.4 ஓவர்களில் சகல விக்கெற்களையும் இழந்து 241 ஓட்டங்கள் எடுத்தது.
நாணயச் சுழற்சியில் வெறி பெற்ற பாகிஸ்தான் முதலில் துடுப்பெடுத்தாடியது.பாபர் அசாம் 5 பவுண்டரிகளை அடித்து அதிரடிகா ட்டினார். 26 பந்துகளில் 23 ஓடங்கள் எடுத்த பாபர் அசாமை ஹர்திக் பாண்ட்யா வெளியேற்றினார்.
3வது விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்த செளத் ஷகில் – முகமது ரிஸ்வான் ஜோடி பாகிஸ்தானை சரிவில் இருந்து மீட்கும் நோக்கில் நிதானமாக ஆடினர். இந்திய சுழலுக்கு கட்டுப்பாட அவர்கள் அதிரடி காட்ட முடியாது திணறின. 9.2 ஓவர்களில் 42 ஓட்டங்களை மட்டுமே எடித்த இந்த ஜோடி 26வது ஓவரில்தான் 100 ஓட்டங்களை எட்டிப்பிடித்தது. 100 ரன்களை கடந்த பிறகு அதிரடியாக ஆட இந்த ஜோடி முயற்சித்தது. கேப்டன் ரிஸ்வான் நிதானமாக ஆடி வந்த நிலையில் அதிரடிக்கு மாற முயற்சித்தார். மறுமுனையில் செளத் ஷகில் அரைசதத்தை கடந்தார்.
ரிஸ்வான் கொடுத்ட கட்ச்சை ஹர்ஷித் ராணா தவறவிட்டார். அடுத்த ஓவரிலே அவர் அக்ஷர் படேல் சுழலில் சிக்ஸர் அடிக்க ஆசைப்பட்டு ஸ்டம்பை பறிகொடுத்தார். 77 பந்துகளில் 3 பவுண்டரியுடன் 46 ஓட்டங்கள் அடித்து ரிஸ்வான் ஆட்டமிழந்தார். சில நிமிடங்களில் ஹர்திக் பாண்ட்யா பந்தில் 76 பந்துகளில் 5 பவுண்டரியுடன் 62 ஓட்டங்கள் அடித்த செளத் ஷகில் வெளியேறினார்.
43வது ஓவரில் பாகிஸ்தான் அணி 200 ஓட்டங்கள் அடித்தது. குஷ்தில் ஷாவிற்கு ஒத்துழைப்பு கொடுத்த நசீம் ஷா 14 ஓட்டங்களில் அவுட்டானார். கடைசி நேரத்தில் குஷ்தில்ஷா அதிரடியில் இறங்கினார். 39 பந்துகளில் 2 சிக்ஸருடன் 38 ஓட்டங்கள் எடுத்து கடைசி விக்கெட்டாக வீழ்ந்தார். 49.4 ஓவர்களில் சகல விக்கெற்களையும் இழந்த பாகிஸ்தான் அணி 241 எடுத்தது.