இந்தியாவுடன் அணுசக்தி மோதலுக்கான எந்தவொரு சாத்தியத்தையும் திட்டவட்டமாக நிராகரித்துள்ளார் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்.
நாட்டின் அணு ஆயுதக் கிடங்கு முற்றிலும் அமைதியான நோக்கங்களுக்காகவும் தற்காப்புக்காகவும் மட்டுமே என்று வலியுறுத்தினார்.
சனிக்கிழமை (ஜூலை 12) இஸ்லாமாபாத்தில் பாகிஸ்தான் மாணவர்களிடம் உரையாற்றிய ஷெபாஸ் ஷெரீப், இந்தியாவுடனான சமீபத்திய ராணுவ மோதல் 55 பாகிஸ்தானியர்கள் கொல்லப்பட்ட போதிலும் பாகிஸ்தான் தனது ராணுவத் திறன்களை நிரூபித்து கடுமையான பதிலடி கொடுத்ததாக மாணவர்களிடம் கூறினார்.
இதுபோன்ற மோதல்களில் அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து கேட்டபோது, ஷெபாஸ் ஷெரீப் அந்தக் கருத்தை ஆதாரமற்றது என்று நிராகரித்தார்.
ஆக்கிரமிப்பு இல்லாத அணுசக்தி கொள்கைக்கு பாகிஸ்தானின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினார்.
, ஜனாதிபதி ஆசிப் அலி ஜர்தாரி பதவி விலகக்கூடும் என்ற ஊகத்தை ஷெபாஸ் ஷெரீப் கடுமையாக நிராகரித்தார்.
மேலும், ராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் அசிம் முனீர் ஜனாதிபதி பதவியை ஏற்க விரும்புவதாக பரவும் தகவல்களையும் வெறும் வதந்திகள் என நிராகரித்தார்.