இலங்கையில் நிதி மோசடி செய்து இந்தியாவுக்குத் தப்பிச் சென்ற மூன்று சந்தேக நபர்கள் நேற்று நாடுகடத்தப்பட்டனர்.
இந்தியாவில் இருந்து நாடு கடத்தப்பட்ட இந்த சந்தேக நபர்கள் மூவரும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.இந்த சந்தேகநபர்கள் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளது.