இரத்தினபுரி மாவட்டத்தில் இந்திய மானிய உதவியுடன் கட்டப்பட்ட வண. தம்மவன்ச நஹிமிகம மாதிரி கிராமத்தின் திறப்பு கடந்த 11 ஆம்திகதி சனிக்கிழமை நடைபெற்றது.
இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் மேதகு சந்தோஷ் ஜா , துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் அனுர கருணாதிலகா ஆகியோர் இணைந்து வண. தம்மவன்ச நஹிமிகம மாதிரி கிராமத்தை 24 பயனாளி குடும்பங்களுக்குக் கையளித்தனர்.
பெருந்தோட்ட மற்றும் சமூக உள்கட்டமைப்பு துணை அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் , பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ராஜபக்ஷ , வீட்டுவசதி, கட்டுமானம் மற்றும் நீர் வழங்கல் அமைச்சின் மூத்த அதிகாரிகள்; தேசிய வீட்டுவசதி மேம்பாட்டு ஆணையத்தின் தலைவர் , மூத்த அதிகாரிகள்; சபரகமுவ மாகாண சபை திகாரிகள், இரத்தினபுரி மாவட்ட நிர்வாகத்தின் அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இலங்கையில் 15 மாவட்டங்களில் கட்டிமுடிக்கப்பட்ட மாதிரி கிராமங்கள் பயனாளிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. ஒட்டுமொத்த திட்ட முன்னேற்றம் 97% க்கும் அதிகமாக உள்ளது, மீதமுள்ள மாதிரி கிராமங்களும் விரைவில் திறந்து வைக்கப்பட்டு பயனாளிகளிடம் ஒப்படைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
